|
திருவிழாக்கள்
தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாக்களை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடுவது என்பது அறிதாகிவரும் காலத்தில் அதிலிருந்து அழகன்குளம் வேறுபட்டு நிற்கிறது. பொங்கள் திருவிழாக்கள்
சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அனவரும் தமது வீடுகளிலோ, அல்லது முற்றத்திலோ அடுப்புகளை அமைத்து பொங்கள் கிண்டி, சூரியனுக்கு தேங்காய் உடைத்து வழிபடுவர். பின்பு இனிப்புகளை,
சுற்றத்தார்க்கும் வறியவர்களுக்க்ம் வழங்கி தாமும் உண்டு மகிழ்வர்.
யாதவர்கள் அதிகம் வாழும் அழகன்குளம் மாட்டுப்பொங்களுக்குப் புகழ்பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை. அன்று காலை முதல் அனைவரும் மாடுகளை கொண்டு சென்று அருகில் உள்ள கண்மாய்,
நெடுங்கணி (சிறு நீர்த் தேக்கம்) அல்லது தத்தமது தோட்டங்களில் உள்ள கிணறுகளில் குளிப்பாட்டி அவைகளை அலங்கரித்து, வண்ணங்கள் பூசி, மாலைவேலையில் அருகில் உள்ள திடலில்
கூடி பொங்கள் வைத்து சாமி கும்பிட்டு மாடுகளுக்கும் படைத்து வீடு திருபுவர்.
பிற பெரிய திருவிழாக்கள் முளைப்பாரி,வைகாசி விசாகத் திருவிழா, சித்திரை பெளர்ணமி, விநாயகர் சதுர்த்தி ஆகியவைகளாகும்.
முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு தெருவிலும் உள்ள மாரியம்மன் கோயில்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படும். அவ்வேளைகளில் இரவு இளைஞர்களின் முளைக்கொட்டு, ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்று, பெண்டிர்கள் ஒன்றுகூடி பாரிவளர்த்து பத்தாவது நாள் அவற்றை அருகில் உள்ள கடலில் ஊர்வலாமாக எடுத்துச் சென்று கரைப்பது வழக்கம். பஜனைமடத்தெருவில் மட்டும் அருகில் உள்ள நீர்த் தேக்கத்தில் பாரிகளைக் கரைப்பர்.
|