|
அழகன்குளம் பெயருக்கு ஏற்றார் போல அழகிய குளங்கள் நிரம்பிய கிராமம். கிராமம் என்பதை விட ஒரு குட்டி நகரம் என்று கூறுமளவிற்கு மக்கள் தொகை, கல்வி வசதிகள், கடைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரமிய பேரூர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தொன்மையும், பெருமையும் மிக்க வைகை நதி கடலுடன் சங்கமிக்கும் சதுப்புநிலப்பகுதியில் ஒருபுறம் கடலும், இருபுறம் ஆறும் சூழ்ந்த தீபகற்பமாக அழகன்குளம் அமைந்துள்ளது. இராமநாதபுரம் நகரிலிருந்து பதிநான்கு கிலோமீட்டர்கள் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்தால் அழகன்குளத்தை வந்தடைய முடியும்.
அழகன்குளம் - பறவைகள் சரணாலயம்
தினமலரில் வந்த செய்தியைப் படிக்க
தனிநபர் புகைப்படத் தொகுப்புகள்
அழகன்குளம் என்றால் அழகனாகிய முருகன் குடிகொண்ட குளங்கள் நிரம்பிய ஊர் என்பது பொருள். அழகன்குளம் சரித்திரப் புகழ்வாய்ந்த மருங்கூர் பட்டினமாக பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.
அழகன்குளத்தின் துறைமுகம், பல கிழக்கு, மற்று மேற்கத்திய நாகரீகங்கள், தேசங்களுடனான வாணிப உறவை பாண்டியநாட்டுடன் கொண்டிருந்ததற்கான ஆதரங்கள் தொல்லியல் துறையினரால் அகழ்ந்து எடுக்கப்பட்டன. ஆண்டாண்டு காலங்களாக விவசாயத்தொழில் செய்து வந்த குடிமக்கள் இன்று அதிகம் அன்னிய செலவானியை நம்பியிருப்பது வேதனைக்குறிய விசயம் தான். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள் வரை புகையிலை விலைச்சளில் அதிகமாகப் பணம் பண்ணியவர்கள். பின்பு வாழை, மிளகாய், நெல், கம்பு, எள், கேழ்விரகு என்று காலநிலைக்கு ஏறப விளைச்சலைப் பெருக்கியவர்கள் இன்று வீட்டிற்கு ஒருவர், இருவர் மற்றும் மூவர் என வெளிநாடுகளில் பணி செய்து பொருளீட்டுகின்றனர்.
அழகன்குளம் புகையிலை என்றால் மிகவும் போற்றத்தக்க தரமான புகையிலையாக பேசப்பட்டன. இன்றும் ஊரின் பல பகுதிகளில் புகையிலைத் தோட்ட கிணறுகளைக் காணமுடியும். தண்ணீர் வசதிபற்றி கூறவேண்டுமானால், பிற்படுத்த்தப்பட்ட மழையளவு குறைந்த மாவட்டமான இராமநாதபுரத்தில் தண்ணீர் பஞ்சம் எப்பொழுதும் ஏற்படாத ஊர்களில் அழகன்குளமும் ஒன்று. பொதுவாகவே இராமநாதபுரத்திற்குக் கிழக்குப்பகுதியில் உள்ள கிராமங்கள் ஆண்டுமுழுதும் தண்ணீர் வசதி உள்ளவை.
|